தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், பிரதமர் நிவாரண நிதிக்கு, 1 கோடி ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்கள் நிவாரண நிதிக்கு தலா, 50 லட்சம் ரூபாயும் அறிவித்துள்ளார். அவரை பின்பற்றி, தெலுங்கு நடிகர் ராம் சரணும், 70 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.
இந்நிலையில், 'பாலிவுட்' திரைப்பட துறையில், உதவித் தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, உதவிகள் வழங்க உள்ளதாக, பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர், நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா, தப்ஸி பன்னுா உட்பட பலர், அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.